
டிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
உலகம் முழுவதும் இரண்டு முறை பயணம் செய்ததாலும், 100 நேர மண்டலங்களுக்கு சென்று திரும்பியதாலும், முக்கியமான தேர்தல் விவாதத்தின் போது தனக்கு ஜெட் லேக் ஆய்விட்டதாக அதிபர் பைடன் கூறியுள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், வியாழன் இரவு ஒரு விவாதத்தில் பங்குபெற்றனர்.
இது வாக்காளர்களுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வயதான வேட்பாளர்களின் திறனை எடைபோடும் ஒரு வாய்ப்பை வழங்கியது.
விவாதத்தில், பெரும்பான்மையான நேரங்களில், அதிபர் பைடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்த போராடுவதை பார்க்க முடிந்தது, வார்த்தைகளுக்கு தடுமாறுவது போல் தோன்றியது.
அமெரிக்கா
இது மன்னிக்க முடியாதது, ஆனால் இது தான் அதன் விளக்கம்
இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது குறித்து அதிபர் பைடன் விளக்கம் அளித்துள்ளார்.
"அன்று எனக்கு ஒரு சிறந்த இரவாக இருக்கவில்லை. நான் பெரிய புத்திசாலியாக பேசவில்லை . விவாதத்திற்கு முன் சுமார் 100 நேர மண்டலங்களை கடந்து உலகை இரண்டு முறை சுற்றி வர வேண்டி இருந்தது" என்று அவர் செவ்வாயன்று ஒரு பிரச்சார நிகழ்வில் உரையாற்றி இருக்கிறார்.
"எனது ஊழியர்களின் பேச்சைக் கேட்கமல், திரும்பி வந்து மேடையில் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன் ... இது மன்னிக்க முடியாதது, ஆனால் இது தான் அதன் விளக்கம்." என்று அவர் கூறியுள்ளார்.