Page Loader
விஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?!

விஜய் சேதுபதி அடுத்ததாக பாண்டிராஜ் உடன் இணைகிறார்?!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2024
05:00 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் குடும்ப பாங்கான கதைகளை சொல்வதில் வல்லவரான பாண்டிராஜ் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை எடுத்திருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு சார்ந்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விஜய் சேதுபதி- பாண்டிராஜ்  திரைப்படம்