45 நாள் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது HERA குழு
செய்தி முன்னோட்டம்
நாசா: ERA குழுவை சேர்ந்த 4 பேர் 45 நாள் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் கிரகத்திற்கு சென்று தங்கி இருந்து தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷரீப் அல் ரொமைதி மற்றும் பியுமி விஜேசேகர எனும் நான்கு ஆய்வாளர்கள் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது.
ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் இருக்கும் நாசாவின் HERA(மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்) வாழ்விடத்திற்குள் மனித சகிப்புத்தன்மை எந்த அளவு இருக்கிறது என்பதை ஆராய இந்த குழு அங்கு அனுப்பப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
நாசா
18 மனித சுகாதார ஆய்வுகளில் பங்கேற்ற ஆய்வாளர்கள்
HERA வின் 7வது பிரச்சாரத்தின் 2வது மிஷன் இதுவாகும்.
ஆழமான விண்வெளி பயணங்களின் போது எதிர்கால விண்வெளி வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவதாலும் சிறைப்படுத்தப்படுவதாலும் என்னென்ன தாக்கத்தை எதிர்கொள்வார்கள் என்பதை ஆய்வு செய்வதற்கான நாசாவின் முயற்சி இதுவாகும்.
இந்த பயணத்தின் போது, இதில் பங்கேற்ற ஆய்வாளர்கள் 18 மனித சுகாதார ஆய்வுகளில் பங்கேற்றனர்.
இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ (யுஏஇ), ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (MBRSC) ஆகியவற்றுடனான நாசாவின் கூட்டு முயற்சிகளாகும்.
இந்த பயணம் கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பியது போல் இருந்திருக்கும் என்பதால், இதன் மூலம் அங்கு சென்று ஆய்வாளர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் மதிப்பிடப்பட உள்ளது.