நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய 'தலைமறைவு' முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர்
செய்தி முன்னோட்டம்
நிலஅபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அதிமுக அமைச்சர் MR விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு, கரூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்படி, அவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தான் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மீண்டும் முன்ஜாமின் மனு #MRVijayabaskar| #Admk| #KarurDistrictCourt | #Bailhttps://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/I6TdEzoumf
— Dinamalar (@dinamalarweb) July 2, 2024