
மின்னல் வேகத்தில் 3D உருவங்களை உருவாக்கும் AI: மெட்டாவின் புதிய அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
முன்பு பேஸ்புக் என அழைக்கப்பட்ட மெட்டா நிறுவனம், இன்று 'மெட்டா 3D ஜென்' ஐ அறிமுகப்படுத்தியது.
இது ஒரு நிமிடத்திற்குள் உயர்தர 3D உருவங்களை உருவாக்கும் புதிய AI அமைப்பாகும்.
டெக்ஸ்ட் மூலம் நமக்கு என்ன வேண்டும் என்பதை விளக்கினால் இந்த தொழில்நுட்பம் அதை 3D பொருளாக உருவாக்கி நம்மிடம் கொடுத்துவிடும்.
3D கிராபிக்ஸ் துறைக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ கேம் மேம்பாடு, தொழில்துறை வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைக்கு தொழில்களை தலைகீழாக திருப்பிப்போடும் கண்டுபிடிப்பு இதுவாகும்.
மெட்டா
யதார்த்தமான 3D பொருட்களை உருவாக்க உதவும் தொழில்நுட்பம்
இந்த புதிய அமைப்பு இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளன. இதில் இருக்கும் மெட்டா 3D அஸெட்ஜென், 3D மெஷ்களை உருவாக்குகிறது. மேலும், இதில் இருக்கும் மெட்டா 3D டெக்ஸ்சர்ஜென் அமைப்புகளை உருவாக்குகிறது.
இவை இரண்டையும் சேர்த்து உருவாக்க பட்டிருக்கும் இந்த தொழில்நுட்பங்கள் உயர் தெளிவுத்திறன் டெக்ஸர்களையும், பிஸிக்கல் ரெண்டரிங்(PBR) பொருட்களையும் 3D உருவங்களாக உருவாக்குகின்றன.
மெட்டாவின் கூற்றுப்படி, இந்த செயல்முறை தற்போதுள்ள பிற தொழில்நுட்பங்களை விட மூன்று முதல் 10 மடங்கு வேகமானது.
இந்த தொழில்நுட்பம் PBR பொருட்களை ஆதரிப்பதால், இது யதார்த்தமான 3D பொருட்களை உருவாக்க உதவும் என்று மெட்டா கூறியுள்ளது