உலகக் கோப்பை வென்றதற்கு 'டீம் இந்தியா ஹை' என்ற பாடலை அர்ப்பணித்த இசைப்புயல் AR ரஹ்மான்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒரு சிறப்புப் பாடலை அர்ப்பணித்தார்.
'மைதான்' படத்தின் 'டீம் இந்தியா ஹை ஹம்' என்ற தலைப்பிலான பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, நிகழ்த்தி, தயாரித்து, ஏற்பாடு செய்த ஒரு ஊக்கமளிக்கும் பாடலாகும்.
முன்னதாக ஜூன் 29 இரவு ரோஹித் சர்மாவின் தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை பாராட்டி, AR ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாட்டை இந்திய அணிக்காக அர்பணிப்பதாக தெரிவித்திருந்தார்.
"இந்தியாவின் #T20IWorldCup வெற்றியைக் கொண்டாடுகிறோம். எங்கள் #TeamIndia பாடல் நிகழ்ச்சியை (sic) கண்டு மகிழுங்கள்" என அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்
Celebrating India’s #T20IWorldCup win 🏆. Enjoy our #TeamIndia song performance 😍🇮🇳
— A.R.Rahman (@arrahman) June 30, 2024
🔗 ➡️ https://t.co/RXPZM2S0aP@BCCI
'மைதான்'
அஜய் தேவ்கனின் 'மைதான்'
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான 'மைதான்' திரைப்படம், இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது.
படத்தில் இடம்பெற்ற பாடலை ஏஆர் ரஹ்மான் மற்றும் நகுல் அப்யங்கர் பாடியுள்ளனர்.
இசைபுயல் பகிர்ந்த வீடியோ, ARR ஃபிலிம் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது பாடகர்கள் குழு மற்றும் பின்னணி இசைக்குழுவுடன் படமாக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியா அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, தோனி, கபில் தேவ், ரஜினி, கமல்ஹாசன், ரன்வீர் சிங், சல்மான் கான், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் மற்றும் பல பிரபலங்கள் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பரபரப்பான கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவை இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.