டெஸ்லா குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் கோபால்ட்டை அதிகம் உபயோகிக்கும் டெஸ்லா நிறுவனம், அதன் கோபால்ட் விநியோகச் சங்கிலியில் குழந்தை தொழிலாளர்களை நியமித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி டெஸ்லா வேலை வாங்குவதாகவும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திட்டமிட்ட நாட்களே தான் மூன்றாம் தரப்பு கண்காணிப்பாளர்கள் கோபால்ட் சுரங்களுக்கு செல்கின்றனர் என்பதால், நெறிமுறையற்ற சுரங்க நடைமுறைகளைத் தடுக்க அது போதுமானதாக இருக்காது என்று ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். சுரங்கங்களை நிகழ்நேரத்தில் சாட்டிலைட் மூலம் கண்காணித்து கொள்ளலாம் என்று டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உறுதியளித்திருக்கிறார் என்றாலும், தற்போதைய அமைப்பு மங்கலான செயற்கைக்கோள் படங்களை மட்டுமே வழங்குகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டெஸ்லாவிற்கு கிடைக்கும் கோபால்ட் சப்ளை
டெஸ்லாவின் கோபால்ட் சப்ளை, பல்வேறு சுரங்கங்களில் இருந்து பேற்படுவதால், அது எங்கிருந்து சரியாக கிடைக்கிறது என்பதை கண்டுபிடிப்பது கடினமான ஒரு காரியமாகும். டெஸ்லா நிறுவனத்திற்கு முதன்மையாக கோபால்ட் சப்ளை செய்வது, கமோட்டோ காப்பர் கோ என்ற நிறுவனம் ஆகும். அந்த ஒரு பெரிய இயந்திரமயமாக்கப்பட்ட சுரங்கத்தை இயக்குகிறது. ஆனால், சில நேரம் இந்த நிறுவனம் உள்ளூர் கைவினைஞர்களின் சுரங்கங்களிலிருந்து கூடுதல் கோபால்ட்டையும் வாங்குகிறது. அப்படிப்பட்ட சிறிய சுரங்கங்கள் குழந்தை தொழிலாளர்களை நியமித்திருக்கலாம் என்றும், சில சமயங்களில் கட்டாய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம் என்றும் விமர்சகர்கள் நம்புகின்றனர்.