விம்பிள்டன்: செய்தி

ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் முழுவதும் பல விறுவிறுப்பான போட்டிகளை கொண்டிருந்தன.

மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற இளம் வீரர்; யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்?

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்றதன் மூலம், மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற டென்னிஸ் நட்சத்திரங்களின் பிரத்யேக கிளப்பில் நுழைந்தார்.

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி; கண்ணீர் விட்டு அழுத நோவக் ஜோகோவிச்

விம்பிள்டன் 2023 ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டம் வென்றார்.

நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்!

டென்னிஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று மாலை தொடங்கியது.

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் மார்கெட்டா வொன்ட்ரூசோவா

நேற்று நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆன்ஸ் ஜெப்யூரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் செக் டென்னிஸ் வீராங்கனையான மார்கெட்டா வான்ட்ரோசோவா.

ஜோகோவிச் vs அல்கராஸ்: விம்பிள்டன் இறுதிப்போட்டியில் வெல்லப் போவது யார்?

டென்னிஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. செர்பிய டென்னிஸ் சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பானிஷ் இளம் வீரர் கார்லோஸ் அல்கலராஸூம் இன்றைய இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறார்கள்.

விம்பிள்டன் 2023 : அரையிறுதியில் ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி

விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஆகியோர் வியாழக்கிழமை (ஜூலை 13) நடந்த அரையிறுதியில் தோல்வியைத் தழுவினர்.

விம்பிள்டன் 2023: பயிற்சி அமர்வை வேவு பார்த்த கார்லோஸ் அல்கராஸின் தந்தை! வெறுப்படைந்த நோவக் ஜோகோவிச்!

விம்பிள்டன் 2023 தொடரின் காலிறுதி போட்டிகள் நடந்து வரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடர்கிறது.

விம்பிள்டன் 2023 : அரையிறுதியை எட்டி ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்

விம்பிள்டன் 2023 தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், செவ்வாயன்று (ஜூலை 11) நடந்த போட்டியில், ஆண்ட்ரே ருப்லெவ்வை 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் 2023: முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்கராஸ்

திங்கட்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினார்.

விம்பிள்டன் வரலாற்றில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்

போலந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக், தனது முதல் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்.

'தலைவா' என ரோஜர் பெடரரை குறிப்பிட்ட  விம்பிள்டன் குழு

டென்னிஸ் விளையாட்டில் மிகவும் முக்கியமான நான்கு கிராண்டு ஸ்லாம் தொடர்களின் ஒன்றான விம்பிள்டன் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

விம்பிள்டன் முதல் சுற்று வெற்றி மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்

ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனான நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் 2023 தொடரில் தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

விம்பிள்டன் 2023 : காயத்தோடு கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவிய வீனஸ் வில்லியம்ஸ்

திங்களன்று (ஜூலை 3) விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவிடம் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.

விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு

லண்டனில் விம்பிள்டன் 2023 தொடர் திங்கட்கிழமை (ஜூலை 3) தொடங்க உள்ள நிலையில், பெண் டென்னிஸ் வீராங்கனைகள் தங்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் அசவுகர்யத்தை எதிர்கொள்வதற்கு புதிய தீர்வை கொண்டு வந்துள்ளது.

தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் திங்கள்கிழமை (ஜூன் 3) விம்பிள்டனில் தனது எட்டாவது பட்டத்தை வெல்வதற்கான முயற்சியையும், 24வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் பெறும் முயற்சியை தொடங்கியுள்ளார்.