Page Loader
மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற இளம் வீரர்; யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்?
மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ்

மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற இளம் வீரர்; யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 17, 2023
10:21 am

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்றதன் மூலம், மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற டென்னிஸ் நட்சத்திரங்களின் பிரத்யேக கிளப்பில் நுழைந்தார். 20 வயதான கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச்சை 1-6, 7-6, 6-1, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இதன் மூலம் 2022 யுஎஸ் ஓபன் பட்டத்துக்கு பிறகு தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் புல் தரை மைதானத்தில் கார்லோஸ் அல்கராஸுக்கு இது முதல் பட்டமும் கூட. ஸ்பெயினின் முர்சியா நகரில் பிறந்த கார்லோஸ், தனது முதல் ஏடிபி ஒற்றையர் பட்டத்தை 2021ஆம் ஆண்டில் உமாக்கில் நடந்த குரோஷிய ஓபனில் பெற்றார்.

worl number 1 carlos alcaraz

உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த இளவயது வீரர்

குரோஷிய ஓபனுக்கு பிறகு, 2022இல் மாட்ரிட், பார்சிலோனா, மியாமி மற்றும் ரியோ டி ஜெனிரோவில் வெற்றிகளைப் பெற்றார். 18 வயதில் மியாமி ஓபனை வென்ற கார்லோஸ், அந்த பட்டத்தை வென்ற மிக இளம் வயது டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து, 19 வயதில் மாட்ரிட் ஓபனை வென்ற இளம் வீரர் ஆனார். மேலும் 19 வருடங்கள் மற்றும் 4 மாத வயதில் ஏடிபி தரவரிசையில் உலக நம்பர் 1 தரவரிசையை அடைந்த இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 2023 இல் மாட்ரிட், பார்சிலோனா, இந்தியன் வெல்ஸ் மற்றும் பியூனஸ் அயர்ஸ் என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார்.