
விம்பிள்டன் 2023: முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்கராஸ்
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினார்.
தொடக்க செட்டில் கார்லோஸ் பின்னடைவை சந்தித்தாலும், பின்னர் தனது நிலையை வலுப்படுத்தி, 3-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் விம்பிள்டனில் முதல்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள கார்லோஸ், டென்மார்க் வீரரான ஹோல்கர் ரூனை காலிறுதியில் எதிர்கொள்கிறார்.
முன்னதாக, திங்கட்கிழமை நடந்த மற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில், ஜோகோவிச் ஹர்காக்ஸை தோற்கடித்தார்.
அதே நேரத்தில் தரவரிசையில் இல்லாத அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் யூபாங்க்ஸ், வலுவான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி
🇪🇸 CARLITOS 🇪🇸@carlosalcaraz defeats Matteo Berrettini 3-6, 6-3, 6-3, 6-3 to reach the #Wimbledon quarter-finals for the first time#Wimbledon pic.twitter.com/IR1O6YIlbx
— Wimbledon (@Wimbledon) July 10, 2023