NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி; கண்ணீர் விட்டு அழுத நோவக் ஜோகோவிச்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி; கண்ணீர் விட்டு அழுத நோவக் ஜோகோவிச்
    விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத நோவக் ஜோகோவிச்

    விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி; கண்ணீர் விட்டு அழுத நோவக் ஜோகோவிச்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 17, 2023
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    விம்பிள்டன் 2023 ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டம் வென்றார்.

    இதன் மூலம் விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை வென்றுள்ள கார்லோஸ் அல்கராஸ், மொத்தம் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்வசம் வைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக 2022 யுஎஸ் ஓபன் தொடரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே விம்பிள்டனில் தொடர்ச்சியாக 5வது பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த நோவக் ஜோகோவிச், தோல்வியை ஜீரணிக்க முடியாமல், நேர்காணலின்போது கண்ணீர் விட்டு அழுதார்.

    novak djokovic tears

    ஒரு சிறந்த வீரரிடம் தோற்றதாக கூறிய நோவக் ஜோகோவிச்

    போட்டிக்கு பிறகு பேசிய நோவக் ஜோகோவிச், ""நான் களிமண் மற்றும் கடினமான மைதானத்தில் மட்டுமே கார்லோஸ் அல்கராஸுடன் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். ஆனால் இப்போது விம்பிள்டன் புல்லில் கூட அவர் அற்புதமாக மாற்றியமைத்தார்.

    இதுபோன்ற போட்டிகளில் நாம் ஒருபோதும் தோற்க விரும்புவதில்லை. தோல்வி குறித்த எல்லா உணர்ச்சிகளும் தீர்ந்தவுடன் நான் கார்லோஸை வாழ்த்த வேண்டும்.

    இன்று நான் ஒரு சிறந்த வீரரிடம் தோற்றேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை." என்றார்.

    ஜோகோவிச் தனது குடும்பத்தினருக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறாரா என கேட்டதற்கு, "என் மகன் இன்னும் சிரித்துக் கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிலளித்தார்.

    ஜோகோவிச்சின் மனைவி ஜெலினா மற்றும் மகன் ஸ்டீபனும் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விம்பிள்டன்
    நோவக் ஜோகோவிச்
    டென்னிஸ்

    சமீபத்திய

    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்

    விம்பிள்டன்

    தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்
    விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு டென்னிஸ்
    விம்பிள்டன் 2023 : காயத்தோடு கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவிய வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸ்
    விம்பிள்டன் முதல் சுற்று வெற்றி மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்

    நோவக் ஜோகோவிச்

    ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன? இந்திய அணி
    இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச் விளையாட்டு
    உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை! உலகம்
    ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்! ஃபிரஞ்சு ஓபன்

    டென்னிஸ்

    ஃபிரஞ்சு ஓபன் 2023 : அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் - கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை! ஃபிரஞ்சு ஓபன்
    ஃபிரஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அரையிறுதிக்கு முன்னேறிய கேஸ்பர் ரூட் ஃபிரஞ்சு ஓபன்
    ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக் ஃபிரஞ்சு ஓபன்
    23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் வரலாற்று சாதனை நோவக் ஜோகோவிச்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025