தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச் திங்கள்கிழமை (ஜூன் 3) விம்பிள்டனில் தனது எட்டாவது பட்டத்தை வெல்வதற்கான முயற்சியையும், 24வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் பெறும் முயற்சியை தொடங்கியுள்ளார். கடைசி நான்கு விம்பிள்டன் பட்டங்களையும் வென்றுள்ள 36 வயதான செர்பிய வீரர் ஜோகோவிச், சென்டர் கோர்ட்டில் 10 ஆண்டுகளில் தோல்வியடையாத சாதனையை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. "நான் சென்டர் கோர்ட்டுக்குள் நுழையும் போது, அது என்னுள் ஏதோவொன்றை எழுப்புகிறது மற்றும் என்னால் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்பட முடியும் என்று நினைக்கிறேன்." என்று விம்பிள்டன் குறித்து ஜோகோவிச் கூறினார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் ஏற்கனவே இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார்.
நிக் கிர்கியோஸ் தொடரிலிருந்து விலகல்
கடந்த ஆண்டு விம்பிள்டன் ரன்னர் அப் ஆன ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ், திங்களன்று தனது முதல் போட்டியில் டேவிட் கோஃபினை எதிர்கொள்ளவிருந்தார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். கிர்கியோஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மேலும் இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இதற்கிடையே, கடந்த வாரம் நடந்த போட் ஹாம்பர்க் புல்-கோர்ட் நிகழ்வில் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நிலை பெண் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் குணமடைந்துள்ளார். அவர் தனது தொடக்க போட்டியில் 114வது தரவரிசையில் உள்ள சீனாவின் சூ லின்னை எதிர்கொள்கிறார்.