அடுத்த செய்திக் கட்டுரை

நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்!
எழுதியவர்
Venkatalakshmi V
Jul 17, 2023
08:42 am
செய்தி முன்னோட்டம்
டென்னிஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று மாலை தொடங்கியது.
இந்த இறுதி போட்டியில், செர்பிய டென்னிஸ் சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பானிஷ் இளம் வீரர் கார்லோஸ் அல்கலராஸூம் மோதினார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த போட்டியின் இறுதியில், 7 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார் கார்லோஸ் அல்கலராஸ்.
4 மணி 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த த்ரில்லிங் போட்டியின் இறுதியில், 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்றார்.
ட்விட்டர் அஞ்சல்
விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்
Carlos Alcaraz has fallen in love with the surface 🌱#Wimbledon pic.twitter.com/aVa4RvdY7g
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது