'தலைவா' என ரோஜர் பெடரரை குறிப்பிட்ட விம்பிள்டன் குழு
செய்தி முன்னோட்டம்
டென்னிஸ் விளையாட்டில் மிகவும் முக்கியமான நான்கு கிராண்டு ஸ்லாம் தொடர்களின் ஒன்றான விம்பிள்டன் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் நேற்றைய தினம், செல்பி ரோஜர்ஸ் மற்றும் எலினா ரைபாக்கினா ஆகிய டென்னிஸ் வீராங்கனைகளுக்கிடையேயான போட்டி, ஆல் இங்கிலாந்து கிளப்பின் சென்டர் கோர்ட்டில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் லெஜன்டான ரோஜர் பெடரர், இந்தப் போட்டியைக் காண வந்திருந்தார்.
20 கிராண்டு ஸ்லாம் பட்டங்களையும், 8 விம்பிள்டன் பட்டங்களையும் வென்ற ரோடர் பெடரரின் வருகையை 2 நிமிடங்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அங்கு போட்டியைக் காண வந்திருந்த டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடினர்.
டென்னிஸ்
தமிழ் சொல்லைப் பயன்படுத்திய விம்பிள்டன் ட்விட்டர் கணக்கு:
நேற்றைய போட்டிக்கு வந்த ரோஜர் பெடரரின் வருகை குறித்து தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் அவரது புகைப்படத்துடன் பதிவொன்றைப் பதிவிட்டிருந்தது, விம்பிள்டன் அமைப்பு.
அதில், பெடரரின் புகைப்படத்துடன் 'தலைவா' என்ற சொல்லானது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. நேற்று பதிவிட்டதில் இருந்து, இந்தக் குறிப்பிட்ட ட்வீட் மட்டும், 5 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.
மேலும், 11,000 லைக்குகளையும், 1,200 ரீட்வீட்களையும் பெற்றிருக்கிறது விம்பிள்டன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் ரோஜர் பெடரரை வரவேற்று பதிவிடப்பட்ட அந்த ட்வீட்.
மேற்கூறிய ட்வீட் குறித்து இந்திய டென்னிஸ் ரசிகர்களும், தமிழ் ரசிகர்களும், நன்றி தெரிவித்தும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
விம்பிள்டன் கணக்கின் ட்விட்டர் பதிவு:
THALAIVA 🤴 #Wimbledon pic.twitter.com/u4nuPknbT2
— Wimbledon (@Wimbledon) July 4, 2023