விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் மார்கெட்டா வொன்ட்ரூசோவா
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆன்ஸ் ஜெப்யூரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் செக் டென்னிஸ் வீராங்கனையான மார்கெட்டா வான்ட்ரோசோவா.
செக் குடியரசை சேர்ந்த மார்கெட்டா வான்ட்ரோசோவா உலக தரவரிசையில் 42வது இடத்தில உள்ள ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார்.
இவர் நேற்று ஆன்ஸ் ஜெப்யூரை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
அதனைத் தொடர்ந்து, விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மாலை-6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
செர்பியாவை சேர்ந்த வீரர் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்கலராஸூம் இன்றைய இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
மார்கெட்டா வொன்ட்ரூசோவா வெற்றி வாகை சூடிய நொடிகள்
15 July 2023 🗓️
— Wimbledon (@Wimbledon) July 15, 2023
The day unseeded Marketa Vondrousova was crowned #Wimbledon champion. pic.twitter.com/Ut3SLlkJag