
விம்பிள்டன் 2023 : காயத்தோடு கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவிய வீனஸ் வில்லியம்ஸ்
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (ஜூலை 3) விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவிடம் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
போட்டியின் நடுவே புல்தரையில் தடுக்கி விழுந்து 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் காயமடைந்தார். இதனால் அவர் வெளியேறிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், சிறிது நேரத்திலேயே மீண்டும் களமிறங்கி கடைசி வரை போராடினார்.
எனினும் அவரால் போட்டியில் வெற்றி பெறமுடியால் தோல்வியைத் தழுவினார். 1997 இல் விம்பிள்டனில் அறிமுகமான வீனஸ் வில்லியம்ஸ், தற்போது 24வது முறையாக பங்கேற்றுள்ளார்.
விம்பிள்டனில் அவரது அறிமுகத்தின்போது, 2023 தொடரில் பங்கேற்கும் 53 வீரர்கள் பிறக்கக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வீனஸ் வில்லியம்ஸ் காயம்
Venus Williams went down on the court after slipping near the net.
— ESPN (@espn) July 3, 2023
She returned to play after taking an injury timeout. pic.twitter.com/h3zXL7Evc1