NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்
    2023இல் டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

    ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 18, 2023
    09:45 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் முழுவதும் பல விறுவிறுப்பான போட்டிகளை கொண்டிருந்தன.

    டென்னிஸ் உலகின் தலைசிறந்த தொடர்கள் என அழைக்கப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்தான்.

    இது ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபனில் தொடங்கி பின்னர் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் என மொத்தம் நான்கு போட்டித் தொடர்களை கொண்டுள்ளது.

    2023 முடிந்து 2024 தொடங்க உள்ள இந்த சமயத்தில் 2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

    Australia Open 2023 Highlights

    ஆஸ்திரேலிய ஓபனில் கம்பேக் கொடுத்த நோவக் ஜோகோவிச்

    2022 சீசனில் கொரோனா தடுப்பூசி போடாததால் நோவக் ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2023 சீசனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சிறந்த மறுபிரவேசம் செய்தார்.

    இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 22வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். மேலும் 10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்றார்.

    இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் எலினா ரைபாகினாவை தோற்கடித்து அரினா சபலெங்கா பட்டம் வென்றார். இது அவரது முதல் பெரிய ஒற்றையர் பட்டமாகும்.

    French Open 2023 Highlights

    பிரெஞ்சு ஓபனில் மீண்டும் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்

    பாரிசின் களிமண் மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற தெம்புடன் களமிறங்கிய நோவக் ஜோகோவிச் இதிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூடை எதிர்கொண்ட நோவக் ஜோகோவிச் 7-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று பட்டத்தை கைப்பற்றினார்.

    இதற்கிடையே மகளிர் பிரிவில், இகா ஸ்வியாடெக் தனது களிமண் மைதானத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி, தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று, களிமண் மைதானத்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினார்.

    Wimbledon Open 2023 Highlights

    விம்பிள்டனில் ஆச்சரியம் கொடுத்த கார்லஸ் அல்கராஸ்

    இங்கிலாந்தின் லண்டனில் உள்ள அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகளில் நடைபெற்ற இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டியில் இளம் வீரர் கார்லஸ் அல்கராஸை எதிர்கொண்டார்.

    இருவருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் கார்லஸ் அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டம் வென்றார்.

    இதன் மூலம் விம்பிள்டன் பட்டம் வென்ற மூன்றாவது இளம் டென்னிஸ் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

    இதற்கிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் யாரும் எதிர்பாராத வகையில் தரவரிசையில் இல்லாத செக் குடியரசு நாட்டின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா பட்டம் வென்று ஆச்சரியப்படுத்தினார்.

    US Open 2023 Highlights

    யுஎஸ் ஓபனில் சாதனை படைத்த ரோஹன் போபண்ணா

    2023 கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் கடைசி போட்டியான யுஎஸ் ஓபனில் நோவக் ஜோகோவிச் டிமிட்ரி மெட்வதேவை தோற்கடித்து தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

    இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற செரீனா வில்லியம்ஸின் சாதனையை சமன் செய்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப் பட்டம் வென்றார்.

    இதற்கிடையே யுஎஸ் ஓபன் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் சேர்ந்து இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

    இதன் மூலம் ரோஹன் போபண்ணா யுஎஸ் ஓபன் இரட்டையர் வரலாற்றில் இறுதிப்போட்டியில் விளையாடிய வயதான வீரர் என்ற சாதனை படைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டென்னிஸ்
    ஃபிரஞ்சு ஓபன்
    யுஎஸ் ஓபன்
    ஆஸ்திரேலிய ஓபன்

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    டென்னிஸ்

    விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் மார்கெட்டா வொன்ட்ரூசோவா விம்பிள்டன்
    நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்! விம்பிள்டன்
    விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி; கண்ணீர் விட்டு அழுத நோவக் ஜோகோவிச் விம்பிள்டன்
    மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற இளம் வீரர்; யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்? கார்லோஸ் அல்கராஸ்

    ஃபிரஞ்சு ஓபன்

    ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்! நோவக் ஜோகோவிச்
    ஃபிரஞ்சு ஓபன் 2023 : அரையிறுதியில் நோவக் ஜோகோவிச் - கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை! நோவக் ஜோகோவிச்
    ஃபிரஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அரையிறுதிக்கு முன்னேறிய கேஸ்பர் ரூட் டென்னிஸ்
    ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக் டென்னிஸ்

    யுஎஸ் ஓபன்

    யுஎஸ் ஓபன் : மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பிவி சிந்து
    டென்னிஸ் வரலாற்றில் அதிகமுறை சர்வீஸ் செய்த வீரர் யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு டென்னிஸ்
    யுஎஸ் ஓபனில் 66 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் கார்லோஸ் அல்கராஸ் கார்லோஸ் அல்கராஸ்
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200வது வெற்றியைப் பதிவு செய்த ஆண்டி முர்ரே டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன்

    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி! சானியா மிர்சா
    அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்! சானியா மிர்சா
    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்! விளையாட்டு
    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார் அரினா சபலெங்கா! விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025