05 Jun 2023

சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் அணியில் கரீம் பென்சிமா? 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்!

ரியல் மாட்ரிட்டில் இருந்து வெளியேறிய கரீம் பென்சிமா, சவூதி புரோ லீக்கின் அல் இத்தாட் நிறுவனத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள் 

கொரோனா பரவலினால் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், எப்படி சிரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஜப்பானியர்கள் கோச்சிங் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் லியோனல் மெஸ்ஸி!

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.

அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட நிலையில் நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பிறருக்கு ஓய்வு கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல் 

கோலிவுட் அல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இருதரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு விவாதங்களுக்கு அழைப்பு விடுத்தது "நேர்மறையானது" என்றும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இன்று(ஜூன் 5)தெரிவித்துள்ளார்.

500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தமாக 5329 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!

ஜெர்மனியின் பெர்லினில் ஜூன் 17 முதல் 25 வரை நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 255 பேர் கொண்ட குழு பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள் 

அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், தமிழ்நாடு முழுவதும் அதன் தாக்கம் இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்!

டி20 உலகக்கோப்பை 2024 தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அங்கிருந்து வேறு நாட்டுக்கு இடம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 

மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள்-சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்.

கிரிப்டோகரன்சி பதிவுகள் : வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? 

திங்கட்கிழமை (ஜூன் 5) காலை இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கிரிப்டோகரன்சி தொடர்பான பதிவுகள் வெளிப்பட்டதால், அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நமது பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான முகமது முஸ்தபா சைதல்வி, குழந்தைகளின் மரபணுவைச் சோதனை செய்வதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது

275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 : சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் ஒப்பந்தம்!

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் இடம் பெற்றுள்ளார்.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது.

பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்

பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது.

அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ!

தொடக்கநிலை 100சிசி கம்யூட்டர் பைக்கான HF டீலக்ஸ் மாடலை புதிய பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து, கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.

ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் ஜூன் 8ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(IIT) மெட்ராஸ், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்திய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

'லூனா'வை எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் கைனடிக் நிறுவனம்!

இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் சாதனை படைத்த லூனா மாடலை மீண்டும் சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது கைனடிக் குழுமம்.

கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நட்சத்திர வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக்!

ஏசி மிலன் கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம்: சுற்றுசூழலுக்கு பாதகம் இல்லாமல் கார்பன் தடத்தைக் குறைத்து பயணிக்க டிப்ஸ்! 

பயணிப்பதும் புதிய இடங்களை ஆராய்ந்து சுற்றி பார்ப்பதும் நம்மில் பெரும்பாலோருக்கு உற்சாகம் தரும். பயணம் செய்வதால் நமது சுற்றுசூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கார்பன் தடத்தைக் குறைக்கும் வழிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சேவாக்கின் மனிதநேயம் : ரயில் விபத்தில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஒடிசாவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடந்த பயங்கரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.

'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்!

விஜய்- அட்லீ காம்போவில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரம் மூலம், கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் இந்திரஜா 'ரோபோ' ஷங்கர்.

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது 

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர் 

சென்ற வெள்ளி இரவு (ஜூன் 2) நாட்டையே உலுக்கி, கிட்டத்தட்ட 270 உயிர்களை காவு வாங்கிய கோர ரயில் விபத்து குறித்து முன்னரே காட்சிப்படுத்தியுள்ளார் ஆண்டவர் கமல்ஹாசன்.

இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(ஜூன் 4) 202ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 174ஆக குறைந்துள்ளது.

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது 

இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.

ஆப்பிளின் WWDC 2023 நிகழ்வு.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்?

ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான WWDC 2023 இன்று தொடங்கவிருக்கிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கிறது ஆப்பிள்.

ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு! 

தமிழகத்தில் மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?

2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.

கார் திருட்டைத் தடுக்க என்ன செய்யலாம்?

இந்தியாவில் கார் திருட்டுக்கள் அதிகமாகி வரும் நிலையில், நமது காரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: மும்பை பதிப்பு! 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவும் தனித்தனி சிறப்புகளை கொண்டது. ஏற்கனவே டெல்லியில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இன்று மும்பையின் பிரபல தெரு உணவுகள் என்னென்ன உள்ளது என்பதை காணலாம்.

மனைவியுடன் ருதுராஜ் கெய்க்வாட்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சனிக்கிழமை (ஜூன் 3) அன்று திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

உடற்பயிற்சியை போலவே வெறும் காலில் நடப்பது ஒரு வகையான அக்குபஞ்சர் சிகிச்சை ஆகும். காலணிகள் இல்லாமல் நடக்க முயற்சிப்பவர்கள் அல்லது நடப்பவர்களாக இருந்தால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 64 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்று அவர்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தற்காக இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்கடித்து சோதனை செய்த நபர்!

இந்தியாவில் முதன்மையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராகவும், விற்பனையாளராகவும் விளங்கி வருகிறது ஓலா நிறுவனம்.

வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு லிட்டன் தாஸ் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து இன்று தங்க விலை இன்று குறைந்திருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

32 ஆபத்தான நீட்டிப்புகளை வெப் ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!

கூகுள் நிறுவனமானது, தவறான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 32 குரோம் நீட்டிப்புகளை (Chrome Extensions) தங்கள் வெப் ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது.

ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.

ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்று பதவியேற்கிறார் லிண்டா யாக்கரினோ!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார் எலான் மஸ்க்.

அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் விலகல்! ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாக, ஜூன் 16 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் இருந்து ஜாக் லீச் நீக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர் 

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் பெரும் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் தான் இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல்

ஆந்திர மாநிலத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்த நடிகை ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி என 8 இந்திய மொழிகளில், இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 90'களில் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா, அவரின் துள்ளலான நடனத்திற்கு பெயர் போனவர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!

தமிழகத்தின் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் ஊருக்குள் நுழைந்து அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது.

2011'ஐ ரிப்பீட் பண்ணும் 2023! ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி?

2011இல் இந்திய கிரிக்கெட்டில் நடந்த விஷயங்கள் தற்போது 2023இலும் அப்படியே நடந்து வருவதால், இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2 

கோலிவுட்டில் வீரன், காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம், போர் தொழில் என இந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மற்றும் வெளியாகவிருந்த படங்களின் பட்டியலை பார்த்தோம். மீதம் இருக்கும் படங்களின் விவரங்களையும் காணலாம்.

வீட்டில் Vs ஜிம்மில் உடற்பயிற்சி எது சிறந்தது? 

வீட்டில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஒரு சில வித்தியாசங்களே இருக்கும். அவற்றில் எது சிறந்தது மற்றும் நமக்கு பயனளிக்க கூடியது என்பதை இந்த பதிவில் காணலாம்.

04 Jun 2023

பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்! 

தமிழகத்தை பொறுத்த வரை முன்னோர்களின் சமையலறைகளில் வார்ப்பிரும்பு மற்றும் செம்பு சமையல் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம் 

மே 30அன்று அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரின் தனியார் குடியிருப்பு சொத்துகள் தான் தற்போது ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே அதிக விலை உயர்ந்ததாக உள்ளது.

போகோவின் F சீரியில் புதிய போன்.. எப்படி இருக்கிறது 'போகோ F5'?: ரிவ்யூ

ஃபவர்புல்லான ப்ராசஸர், குறைவான விலை என்பது தான் போகோ F-சீரிஸின் தாரக மந்திரம். 2018-ல் வெளியான F1-ல் இருந்தே இதனைப் பின்பற்ற வருகிறது போகோ. அந்த சீரிஸின் புதிய F5 மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன?

தங்களுடைய புதிய ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னியை இந்தியாவில் இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி. இந்தியாவின் ஆஸ்தான ஆஃப்-ரோடராக இருக்கும் மஹிந்திராவின் தாரில் இல்லாத என்னென்ன வசதிகள் ஜிம்னியில் கொடுக்கப்பட்டிருக்கிறது? பார்க்கலாம்.

திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?

கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. செப் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது

உலகின் மிகப்பெரும் சர்வாதிகாரியாக கருதப்படும் ஹிட்லரின் 52வது பிறந்த நாளுக்கு அவரது காதலி பரிசாக கொடுத்த ஒரு பென்சில் ஏலத்திற்கு வர இருக்கிறது.

தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3! 

தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களின் சிறப்பையும் அங்கு எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்து வருகிறோம். அடுத்து அவசியம் பார்க்க வேண்டிய இடங்களை காணலாம்.