Page Loader
கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு 
கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு

கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு 

எழுதியவர் Nivetha P
Jun 02, 2023
07:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு-கரூர் மாவட்டத்தில் வரிஏய்ப்பு சம்பந்தமாக மே.26ம்தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட சோதனைக்கு திமுக'வினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் வந்த வாகனங்களை சேதப்படுத்தினர். இதனால் அதிகாரிகளும் சோதனை செய்யாமல் அங்கிருந்து சென்றனர். பின்னர், மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் அதிகாரிகள் தங்கள் சோதனையினை மேற்கொண்டனர். இந்நிலையில் இவர்கள் சோதனை மேற்கொண்ட சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஒருவருக்கு நேரில் ஆஜராக கூறப்பட்டு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 நாளான இன்றும்(ஜூன்.,2)துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனைச்செய்தனர். 20க்கும்மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டதையடுத்து, 8வதுநாளான இன்றோடு சோதனை நிறைவுற்றுள்ளது. இதனால் பாதுகாப்பினை திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறைக்கு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post