Page Loader
எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!

எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 02, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு மும்பையில் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதலே தோனி தனது இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் முதல் வேளையாக அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறுகையில், "வியாழன் (ஜூன் 1) அன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்." என்று கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post