Page Loader
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: டெல்லி பதிப்பு! 
டெல்லி பதிப்பு

இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: டெல்லி பதிப்பு! 

எழுதியவர் Arul Jothe
Jun 03, 2023
10:14 am

செய்தி முன்னோட்டம்

இந்திய தெரு உணவுகளில் கலக்கப்படும் மசாலாப் பொருட்கள், அதன் சுவையையும், வாசனையும் கூட்டுகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவும் தனித்தனி சிறப்புகளை கொண்டது. அந்த வகையில் இன்று டெல்லியின் பிரபல தெரு உணவுகளை காணலாம். டெல்லி சாட்: இந்த தெரு உணவின் தனித்துவமான இனிப்பு, காரம் மற்றும் புளிப்பான சுவையை நாம் அனைவரும் முயற்சி செய்தே ஆக வேண்டும். மற்ற இடங்களில் கிடைத்தாலும், டெல்லியில் கிடைக்கும் சாட் உணவின் சுவைக்கு ஈடாகாது. சாட் பப்டி, ஆலு சாட் மற்றும் தௌலத் கி சாட் முதல் தஹி பல்லே மற்றும் பல்லா பப்டி வரை, டெல்லியின் தெரு உணவு கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

Street Food

டெல்லியில் கிடைக்கும் தெரு உணவுகள்

ராம் லட்டு: ராம் லட்டு என்பது டெல்லியில் மட்டுமே கிடைக்கும் ஒரு சூப்பர் தெரு உணவாகும், ஆனால் நீங்கள் இதுவரை சாப்பிட்ட லட்டுகளைப் போலல்லாமல் தனிப்பட்ட சுவையை தரும். இந்த சிற்றுண்டியில், துருவிய முள்ளங்கி மற்றும் காரமான பச்சை நிற சட்னியுடன், இந்த லட்டு வழங்கப்படும். இந்த சூடான ராம் லட்டுகளை, சாப்பிட்ட பிறகு உங்களுக்கு நிச்சயமாக பிடித்து போகும். சமோசா: ஒவ்வொரு தேநீர் பிரியர்களும் இந்த பிரபலமான சமோசாவை விரும்புவார்கள். சமோசா உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடையே பிரபலமாக உள்ளது என்றாலும், டெல்லியில் கிடைக்கும் சமோசாவின் சுவையை அடித்து கொள்ளமுடியாது. டெல்லியில் உள்ள ஒவ்வொரு தேநீர் கடையிலும் சமோசா கிடைக்கும்.