ஹார்லி-டேவிட்சன் X440-க்கான முன்பதிவு தொடங்கியது!
2020-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது அமெரிக்காவைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஹீரோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய பைக்கை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம். கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடவிருக்கும் தங்களுடைய புதிய X440 ரோட்ஸ்டர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இந்த புதிய பைக்கை வரும் ஜூலை மாதம் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருக்கும் நிலையில், அதற்கான முன்பதிவை தற்போது தொடங்கியிருக்கிறது ஹார்லி-டேவிட்சன். ரூ.25,000 கொடுத்து புதிய ஹார்லி-டேவிட்சன் X440-ஐ இந்திய பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய பைக்கின் டிசனை மற்றும் உருவாக்கத்தை ஹார்லி-டேவிட்சன் செய்ய, அதனை இந்தியாவில் உற்பத்தி செய்து, விநியோகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ளவிருக்கிறது ஹீரோ.