கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி.
இதனை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு கருணாநிதிக்கு 100வது பிறந்தநாள்.
எனவே, இந்தாண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் விழாவினை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, திமுக கொடிக்கம்பங்களில் கொடியினை ஏற்றுவது, திமுக குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கான உதவி தொகையினை கொடுப்பது, பொதுக்கூட்டம், நூலகங்கள் துவக்கம் போன்ற பல்வேறு மக்கள் பயன்பெறும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
நூற்றாண்டு விழா
சென்னை புளியந்தோப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
இதனையடுத்து புளியந்தோப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசவுள்ளார்.
தொடர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவின் துவக்க நிகழ்ச்சி இன்று(ஜூன்.,2) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு இலச்சினை(லோகோ) வெளியிட்டு உரையாற்றவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் நூற்றாண்டு விழாவுக்கான நிகழ்ச்சிகள் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.