Page Loader
'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து! 
இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து! 

எழுதியவர் Arul Jothe
Jun 02, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன். இசைஞானி இளையராஜா 81வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகில் கடந்த 8 சதாப்தங்களாக இசையை அனைவருக்கும் மருந்தாகவும் உயிரோட்டமாகவும் மாற்றியவர் இவர். நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உரிய உயரிய அண்ணன்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், "இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள்' என்றும் 'இசையில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் தான் என் அண்ணன் இளையராஜா" என்றும் எழுதியிருந்தார். "இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள்