தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 2!
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களில் ஆலப்புழா, கூர்க், கபினி போன்ற இடங்களின் சிறப்பையும் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். அடுத்து தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய 3 இடங்களை காணலாம்.
கொடைக்கானல்: தமிழ்நாட்டின் மிக அழகான மலை நகரங்களில் ஒன்றான கொடைக்கானல், கோடை காலங்களில் சுற்றுலா செல்ல உகந்த இடமாகும். மூடுபனி, குளிர்ந்த தட்பவெப்பம் இதன் சிறப்பாகும். மார்ச் முதல் மே வரை கொடைக்கானலுக்குச் செல்ல சிறந்த பருவமாகும்.
கொடைக்கானலை எப்படி அடைவது: 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரை விமான நிலையம் மற்றும் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடை சாலை ரயில் நிலையம் ஆகியவை கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள இடங்களாகும். பிறகு அங்கிருந்து பஸ் அல்லது கேப் பயன்படுத்தலாம்.
Travel spots
பிரபலமான இடங்கள்
வயநாடு: பசுமையான காடுகளுக்கு பெயர்போன இடம் வயநாடு. இது கேரளாவில் சுல்தான் பதேயரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மே வரை வயநாடு செல்ல சிறந்த பருவமாகும்.
வயநாடுக்கு எப்படிப் பயணிப்பது: கரிப்பூர் விமான நிலையம் & கோழிக்கோடு இரயில் நிலையம் வயநாட்டிலிருந்து 100 மற்றும் 110 கிமீ தொலைவில் உள்ளது. பிறகு பஸ் அல்லது கேப் மூலம் பயணிக்கலாம்.
அகும்பே: பசுமையான மழைக்காடு மற்றும் விலங்கினங்களுக்கு இருப்பிடமாகவும் அகும்பே உள்ளது. பல நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை அகும்பேக்கு பயணிக்க சிறந்த பருவமாகும்.
அகும்பேக்கு எப்படி செல்வது: 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலுரு விமான நிலையம் & 50 கிலோமீட்டரில் உடுப்பி ரயில் நிலையம் மூலம் செல்லலாம்.