500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கியானது, 2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து, 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வங்கிகளுக்கு வெளியிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இனி ஒவ்வொரு காலாண்டும் ரூபாய் நோட்டுக்களின் தகுதியை சோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தும் தகுதியுடன் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்ய 11 அளவுகோள்களையும் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதற்காக ரூபாய் நோட்டுக்களின் தரத்தின் சோதனை செய்யும் எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. மேலும், கள்ள நோட்டுக்கள் இருக்கிறதா என்பதையும் இந்த சோதனையின் போது கண்டறிய வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது
ரூபாய் நோட்டு பரிசோதனைக்கு ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கும் அளவுகோள்கள் என்னென்ன?
அதீத அழுக்கு படிந்திருத்தல், அதிக மடிப்புகளைக் கொண்டிருத்தல், மிகவும் கசங்கி இருத்தல், குறிப்பிட்ட இடத்தில் கறையாக இருத்தல், கிழிசலைக் கொண்டிருத்தல், குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஓட்டையைக் கொண்டிருத்தல், ரூபாய் நோட்டின் சாயம் வெளுத்திருத்தல் மற்றும் கிழிந்து மீண்டு ஒட்டப்பட்ட நிலையில் இருத்தல். மேற்கூறிய அளவுகோள்ளைக் கொண்டிருந்தால், அதனை பயன்படுத்தத் தகுதியில்லாத ரூபாய் நோட்டாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும், ஒன்வொரு காலாண்டிலும் தகதியில்லாத ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சுறுசுழற்சி செய்யப்பட வேண்டிய ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்களை அனைத்தும் தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.