Page Loader
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு! 
'பராசக்தி' படம் வெளியீடு

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு! 

எழுதியவர் Arul Jothe
Jun 02, 2023
03:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டு இலச்சினையை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருணாநிதிக்கு சிலை வைப்பது, நலத் திட்ட உதவிகள் செய்வது போன்ற விஷயங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான பராசக்தி படத்தை சென்னை உட்லாண்ட்ஸ் திரையரங்கில் மறுவெளியீடு செய்ய உள்ளனர். 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோர் இயக்கி, மு.கருணாநிதி அவர்கள் வசனத்தில் உருவான படம் பராசக்தி.

ட்விட்டர் அஞ்சல்

'பராசக்தி' படம் மறுவெளியீடு!