Page Loader
'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்! 
இசை ஞானி இளையராஜாவின் 81 வது பிறந்த நாள்

'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்! 

எழுதியவர் Arul Jothe
Jun 02, 2023
10:28 am

செய்தி முன்னோட்டம்

சிறுவயதிலேயே ஆர்மோனியம், கிட்டார் போன்ற இசை கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இளையராஜா, தனது சகோதரர்களுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நடத்தி வந்தார். அதன்பிறகு, தனது 26வது வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்க சென்னை வந்துசேர்ந்தார். தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் வெளிநாட்டு கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்ட இளையராஜா, 1976ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' என்ற படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மோகன், ராமராஜன், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் சினிமா வாழ்க்கை சிறப்புற தொடங்கியதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாகும். அன்னக்கிளியில் தொடங்கி. தற்போது வெளிவந்த 'காட்டுமல்லி' பாடல் வரை, தன் இசையாலேயே மக்களை கட்டிபோட்டு வைத்திருக்கும் இளையராஜா, 80s கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல 2k கிட்ஸ்களுக்கும் விருப்பமானவர். இன்று அவரின் 81வது பிறந்தநாள்.

ட்விட்டர் அஞ்சல்

இளையராஜாவின் பிறந்த நாள்