Page Loader
பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை 
பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை 

எழுதியவர் Nivetha P
Jun 02, 2023
06:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கடற்கரை எல்லையினை தாண்டி பாகிஸ்தான் கடற்பரப்பின் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் பலர் அண்மை காலமாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதன்படி 651 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 631 மீனவர்களுக்கு தண்டனை காலம் முடிந்து நாடு திரும்ப காத்துக்கொண்டுள்ளார்கள். மொத்தமாக அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழலில், கடந்த மாதம் 12ம்தேதி 198 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post