மல்யுத்த வீரர்கள்: செய்தி

டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்

ஏப்ரல் 17, புதன்கிழமை அன்று வெளியான டைம் இதழின், 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு.

பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களை மிரட்டியதாகவும், போராட்டத்தை கைவிட்டு அமைதியாக போகும்படியும் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 வீரர்களுக்கு எதிராக இளம் இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம்

இந்திய மல்யுத்தத்தில் நிலவும் நெருக்கடி புதன்கிழமை (ஜனவரி 3) அன்று நூற்றுக்கணக்கான ஜூனியர் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் கூடியதால் புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

விருதுகளை நடைபாதையில் விட்டுச் சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சனிக்கிழமையன்று (டிசம்பர் 30), அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் உள்ள நடைபாதையில் விட்டுச் சென்றார்.

சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு

சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

WFI தலைவர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்த பஜ்ரங் புனியா

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எதிர்ப்பை பதிவு செய்த ஒருநாள் கழித்து, பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற்று கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் தேதி டிசம்பர் 8க்கு பிறகு அறிவிப்பு

நிறுத்தப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு, டிசம்பர் 8 அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

இளம் இந்திய மல்யுத்த வீராங்கனையான ஆண்டிம் பங்கால், நடப்பு உலக சாம்பியனான ஒலிவியா டொமினிக் பாரிஷை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

36 வயதில் முன்னாள் WWE சாம்பியன் பிரே வியாட் மாரடைப்பால் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

முன்னாள் WWE சாம்பியனான தொழில்முறை மல்யுத்த வீரர் பிரே வியாட் தனது 36 வயதில் மாரடைப்பால் காலமானார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு

உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW) இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங் குடும்பத்தினர் பங்கேற்க தடை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அவரது மகனும் துணைத் தலைவருமான கரண் பூஷன் சிங் ஆகியோர் வரவிருக்கும் மல்யுத்த சம்மேளன தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய இளம் மல்யுத்த வீரர்கள்

இந்திய மல்யுத்த வீரர்களான ஆன்டிம் பங்கல் மற்றும் சுஜீத் கல்கல் ஆகியோர் புதன்கிழமை (ஜூலை 19) டெல்லி உயர்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சோதனைகளுக்கு வழங்கப்பட்ட விலக்குகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

வினேஷ் போகத் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதற்கு இளம் மல்யுத்த வீராங்கனை எதிர்ப்பு

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியனான ஆண்டிம் பங்கால் புதன்கிழமை (ஜூலை 19) வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனை விலக்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

18 Jul 2023

டெல்லி

மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன்

பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், ஆறு பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போடப்பட்ட வழக்கில், அவருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

12 Jul 2023

டெல்லி

'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை 

WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கில் அவரை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

15 Jun 2023

இந்தியா

மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு எதிராக மைனர் பெண் மல்யுத்த வீரர் பதிவு செய்த புகார்களுக்கு "உறுதியான ஆதாரங்கள்" எதுவும் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை இன்று(ஜூன் 15) தெரிவித்துள்ளது.

13 Jun 2023

இந்தியா

பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காக ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல்

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் திங்கள்கிழமை (ஜூன் 12) அறிவித்துள்ளது.

ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை (ஜூன் 7) தெரிவித்தார்.

07 Jun 2023

இந்தியா

விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று(ஜூன் 7) விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

07 Jun 2023

இந்தியா

 மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு  

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைத்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று(ஜூன் 7) தெரிவித்தார்.

05 Jun 2023

இந்தியா

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 

மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள்-சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்.

02 Jun 2023

இந்தியா

ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை 

மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடி வரும் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விவசாயத் தலைவர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை!

1983 ஐசிசி உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் கூட்டாக தற்போது நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

02 Jun 2023

இந்தியா

பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.