உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
இளம் இந்திய மல்யுத்த வீராங்கனையான ஆண்டிம் பங்கால், நடப்பு உலக சாம்பியனான ஒலிவியா டொமினிக் பாரிஷை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான 53 கிலோ தொடக்கச் சுற்றில் போட்டியிட்ட ஆண்டிம் பங்கால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஒலிவியா டொமினிக் பாரிஷிடம் ஆரம்பத்தில் 0-2 என பின்தங்கி இருந்தார். எனினும், பின்னர் வலிமையாக முன்னேறி கடைசி வரை ஆதிக்கம் செலுத்தியதோடு 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். செப்டம்பர் 16 முதல் நடந்து வரும் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து பெண்கள் மற்றும் 10 ஆண்கல் என மொத்தம் 15 இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் கோட்டா அல்லது ஒலிம்பிக் அல்லாத பிரிவுகளில் பதக்கம் பெறாமல் ஏற்கனவே போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
Twitter Post
#TOPSchemeAthlete @OlyAntim makes 🇮🇳 proud at the World Wrestling Championships, being held in Belgrade, 🇷🇸 She clinches 3-2 victory in the 53kg Weight Category, taking down last year's #WorldChampion Parris D 🇺🇸 to reach Round 1⃣6⃣ of the World Championships Many... pic.twitter.com/lXrM2aFZJC— SAI Media (@Media_SAI) September 20, 2023