வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சனிக்கிழமை (ஜூன் 13) தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 அதிகரித்து ₹13,860 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 அதிகரித்து ₹1,10,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹65 அதிகரித்து ₹15,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹520 அதிகரித்து ₹1,20,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹60 அதிகரித்து ₹11,610 ஆகவும், ஒரு சவரன் ₹480 அதிகரித்து ₹92,880 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹270 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் இடையே தற்போது மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.