LOADING...
மல்யுத்த விளையாட்டில் மறுபிரவேசம்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை குறிவைத்து மீண்டும் களமிறங்குவதாக வினேஷ் போகட் அறிவிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை குறிவைத்து மீண்டும் களமிறங்குவதாக வினேஷ் போகட் அறிவிப்பு

மல்யுத்த விளையாட்டில் மறுபிரவேசம்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை குறிவைத்து மீண்டும் களமிறங்குவதாக வினேஷ் போகட் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2025
02:01 pm

செய்தி முன்னோட்டம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மனவேதனைக்குப் பிறகு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் மல்யுத்த விளையாட்டுக்குத் திரும்புவதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளார். 31 வயதாகும் வினேஷ் போகட், தனது ஒலிம்பிக் கனவுகளைத் துரத்துவதாகவும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தைக்குத் தாயான வினேஷ், தனது இந்த இரண்டாவது மல்யுத்தப் பயணத்தில், தனது சிறிய குழந்தையே தனக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பாரிஸ் துயரம்

பாரிஸ் துயரமும் ஓய்வு முடிவும்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகட், பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்ட பிறகுப் பலத்த சர்ச்சைக்கு மத்தியில் மல்யுத்தப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காலையில், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டார். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெறும் நிலையில், அவரது கனவு நொறுங்கியது.

மறுபிரவேசம்

உணர்ச்சிப்பூர்வமான மறுபிரவேச அறிவிப்பு 

18 மாத கால ஓய்வுக்குப் பிறகுத் திரும்பியுள்ள வினேஷ், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உணர்ச்சிகரமான பதிவில், தனது சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். "பாரிஸ் தான் முடிவா என்று மக்கள் தொடர்ந்து கேட்டனர். நீண்ட நாட்களுக்கு என்னிடம் பதில் இல்லை. அழுத்தம், எதிர்பார்ப்புகள் மற்றும் எனது சொந்த லட்சியங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தனிமையில் நான் மறந்த ஒரு உண்மையைக் கண்டறிந்தேன். 'அந்த நெருப்பு இன்னும் அணையவில்லை'" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஒலிம்பிக்

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்

மேலும் அவர், ஒழுக்கம், வழக்கமான பயிற்சி, மற்றும் போராடும் குணம் ஆகியவை தன் ரத்தத்தில் கலந்துவிட்டதாகவும், தன்னை விட்டு எவ்வளவு விலகிச் சென்றாலும் ஒரு பகுதி எப்போதும் விளையாட்டிலேயே இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். "எனவே, இதோ நான் இருக்கிறேன், அச்சமில்லாத இதயத்துடனும், குனிய மறுக்கும் மனப்பான்மையுடனும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 28 நோக்கி மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன்" என்று வினேஷ் அறிவித்துள்ளார்.

Advertisement

தாய்மை

தாய்மைக்குப் பிறகுப் போட்டிக்குத் திரும்பிய வீராங்கனைகள் பட்டியலில் இணைவு

வினேஷ் போகட், ஜூலை 2025 இல் தனது கணவர் சோம்வீர் ரதீயுடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மீண்டும் போட்டிக்குத் திரும்பும் உயர்தர இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இவர் இப்போது இணைகிறார். "இம்முறை நான் தனியாக நடக்கவில்லை. எனது மகனும் எனது அணியில் இணைகிறார், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தப் பயணத்தில் அவனே எனது மிகப்பெரிய ஊக்கமும், உற்சாகமூட்டும் ரசிகனும் ஆவான்." என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பாரிஸ் துயரத்தின் தாக்கம் குறித்து, அவரது அணியின் எடைக் குறைப்பு மேலாண்மை மற்றும் கடைசி நேர நெறிமுறைகள் கையாண்ட விதம் குறித்து நாடு தழுவிய விவாதங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement