Page Loader
டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்
செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார்

டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2024
02:03 pm

செய்தி முன்னோட்டம்

ஏப்ரல் 17, புதன்கிழமை அன்று வெளியான டைம் இதழின், 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார். பெண் விளையாட்டு வீராங்கனைகளின் உரிமைகளை வென்றெடுப்பதில் அவரது உறுதியான உறுதிப்பாடு மற்றும் மல்யுத்த சமூகத்திற்குள் கூறப்படும் பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக ஒரு வலிமையான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றின் காரணமாக இந்த மதிப்புமிக்க அங்கீரத்தை அவர் பெற்றுள்ளார். சென்ற ஆண்டு, சாக்ஷி மாலிக், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா போன்ற முக்கிய நபர்களுடன் சேர்ந்து, இந்தியா மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்.

மல்யுத்த மங்கை

போராட்டத்தை தொடரும் சாக்ஷி மாலிக்

சாக்ஷி மாலிக்கின் முயற்சியால் பிரிஜ் பூஷன் WFI இன் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், அவரது நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் WFI தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். இதனை தொடர்ந்து சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சாக்ஷி மாலிக் இன்னும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தனது போரைத் தொடர்கிறார் என்றும், அவரது ஒளி தொடர்ந்து பிரகாசிக்கிறது என்றும் டைம் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது. சாக்ஷி மாலிக்குடன், ஆலியா பட், இந்தோ-பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள்.