வினேஷ் போகட்டிற்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்த ஊர் மக்கள்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று ஹரியானாவில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் தங்கப் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார். வினேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், போட்டி நாளன்று காலையில், அனுமதிக்கப்பட்ட 50-கிலோ எடை வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருந்ததற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவரது கனவுப் பயணம் முடிவுக்கு வந்தது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், வினேஷ் இந்தியா திரும்பியதும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவரது சொந்த ஊரில், அவரது பிறந்தநாளில் சர்வ்காப் பஞ்சாயத்தால் சிறப்பு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.