NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை 
    இதுகுறித்து நேற்று சில செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 12, 2023
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கில் அவரை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் எம்பியுமான பிரிஜ்-பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அவரை கைது செய்யக்கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    அந்த போராட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், "எங்கள் போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

    அதன்பிறகு, கடந்த 15ஆம் தேதி பிரிஜ் பூஷனுக்கு எதிராக 1000 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    ஸ்ஹ்ய

     பிரிஜ் பூஷன் நிருபரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு 

    இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன், 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றும், அதில் 15-பேர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக வாக்கு மூலம் அளித்தனர் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், அதனால் அவரை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.

    இதற்கிடையில், ஜூலை-18ஆம் தேதி அவர் டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் நிலையில், இதுகுறித்து நேற்று சில செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அவர், எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பேசி கொள்வேன் என்றும், ஊடங்கங்களுக்கு மசாலா செய்தி கொடுக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    அந்த பேட்டியின் போது, 'டைம்ஸ்-நவ்' நிருபரிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பிரிஜ் பூஷன் சரண் சிங்
    மல்யுத்த வீரர்கள்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    டெல்லி

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  இந்தியா
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! மல்யுத்தம்

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா

    மல்யுத்த வீரர்கள்

    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! இந்திய அணி
    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  இந்தியா
    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! பிரிஜ் பூஷன் சரண் சிங்
    இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல் மல்யுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025