Page Loader
வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2024
11:58 am

செய்தி முன்னோட்டம்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது சொந்த கிராமமான பலாலிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) திரும்பியபோது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் சுமார் 100 கிராம் கூடுதல் எடையைக் கொண்டிருந்தார் எனக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர், விரைவில் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் சனிக்கிழமை நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தனது சொந்த கிராமத்திற்கு சென்ற அவரை 60க்கும் மேற்பட்ட பெண்களை உள்ளடக்கிய பெருந்திரளான மக்கள் வரவேற்றனர். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லாவிட்டாலும், கிராமத்தினர் சொந்தமாக தங்கப்பதக்கம் செய்து அவருக்கு வழங்கி கௌரவித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

வினேஷ் போகட்டிற்கு தங்கம்

உணர்ச்சிவசம்

பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட வினேஷ் போகட்

கிராமத்தினரின் வரவேற்புக்குப் பிறகு பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், "அத்தகைய அன்புக்கும் மரியாதைக்கும் நான் தகுதியானவரா என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு இடத்தில் பிறந்ததற்காக நான் பாக்கியம் பெற்றுள்ளேன்." என்று கூறினார். மேலும், "எனது கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன், அதனால் அவர்கள் முன்னேறி என் இடத்தைப் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும். நீங்கள் அனைவரும் எனது சகோதரிகளை ஆதரித்து அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். ஒலிம்பிக் பதக்கம் பெறாதது ஒரு ஆழமான காயம், அது குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் எனது நாட்டினரிடமும், எனது கிராம மக்களிடமும் நான் கண்ட அன்பு, எனக்கு கூடுதல் பலத்தைத் தரும்." என்று கூறினார்.