
ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை (ஜூன் 7) தெரிவித்தார்.
மேலும் ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் புதிய தேர்தல் நடைபெறும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
டெல்லியில் மல்யுத்த வீரர்களுடன் நடந்த ஆறு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய வீரர்களுடன் அமைச்சர் அமித் ஷாவும் சனிக்கிழமை (ஜூன் 3) நேரடியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | I had a long 6-hour discussion with the wrestlers. We have assured wrestlers that the probe will be completed by 15th June and chargesheets will be submitted. The election of WFI will be done by 30th June: Union Sports Minister Anurag Thakur after meeting wrestlers pic.twitter.com/9hySRefxNM
— ANI (@ANI) June 7, 2023