எப்படி இருக்கிறது 'ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 5G'?: ரிவ்யூ
நார்டு CE 2 லைட் 5G மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக நார்டு CE 3 லைட் 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். சில வசதிகளை அப்டேட் செய்திருந்தாலும், சில அம்சங்களை அப்படியே CE 2-வில் இருந்து கடத்தியிருக்கிறது ஒன்பிளஸ். நார்டு CE 3 லைட் மொபைல் எப்படி இருக்கிறது? வசதிகள்: 6.72 இன்ச் LCD டிஸ்பிளே குவால்காம் ஸ்னார்டிராகன் 695 ப்ராசஸர் 108MP+2MP+2MP ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா 5000 mAh பேட்டரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.19,999 8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.21,999
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
ஒரு ப்ரீமியம் பிராண்டுக்கு ஏற்ற வகையில் நல்ல டிசைனையே கொண்டிருக்கிறது CE 3 லைட். வழக்கம் போல், லைட் சீரஸ் என்பதால் இந்த முறையும் அலர்ட் ஸ்லைடரை ஒன்பிளஸ் கொடுக்கவில்லை. பவர் பட்டனோடு சேர்த்தே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரைக் கொடுத்திருக்கிறது. குறை சொல்ல முடியாத அளவிற்கான பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது இந்த CE 3 லைட். இதன் ஆக்ஸிஜன்OS வழக்கம் போல் பயன்படுத்துவதற்கு ரெப்ஃரஷிங்காக இருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 30 நிமிடத்தில் இதன் பேட்டரி 80% சார்ஜ் ஆகிவிடுமாம். இதன் கேமராவும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நல்ல பெர்ஃபாமன்ஸையே கொண்டிருக்கிறது. மொத்தத்தில், ஒரு ப்ரீமியம் பிராண்டாக, குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட்போனை அளித்திருக்கிறது ஒன்பிளஸ்.