
என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவில் 2015-ல் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகியது.
படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 600 கோடிக்கு மேலும், இரண்டாம் பாகம் ரூ. 500 கோடிக்கு மேலும் வசூலித்தது.
இந்த படத்திற்காக 400 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட செய்தியை தற்போது ஒரு பேட்டியில் ராணா டகுபதி வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, இத்தகவலை கூறினார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் திரைப்படங்களுக்கு பணம் திரட்டுவது பற்றிய பேச்சு எழுகையில் பாகுபலி படத்திற்காக வாங்கப்பட்ட கடன் குறித்து பேசினார்.
Bagubali movie
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைபடத்திற்கு வாங்கிய கடன்
அப்போது, " மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படமெடுப்பதற்கெல்லாம் பணம் முதலீடு செய்ய வீடு அல்லது அவர்களது சொத்தை வங்கியில் அடமானமாக வைத்தனர். அதிக வட்டிக்கு கடன்களும் வாங்கினர்" என்றார்.
மேலும், பாகுபலி படத்திற்காக 300-400 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது, அதற்காக சுமார் 24-28 சதவீத வட்டியும் செலுத்தினோம்" என்றார்.
பாகுபலி-1 வெளியான பிறகு, தயாரிப்பாளர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக, 24 சதவீத வட்டியில், 180 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும் ராணா கூறினார்.
"முதல் பாகத்தில் வசூலான பணத்தை விட இரு மடங்கு செலவு செய்தோம். அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் எடுத்தோம். படம் ஹிட் ஆகவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று தெரியாது" என அவர் மேலும் தெரிவித்தார்.