ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா!
ஓமனில் உள்ள சலாலாவில் நடைபெற்ற ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் வியாழக்கிழமை (ஜூன் 1) இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்தியா அதிகபட்ச பட்டங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2004, 2008 மற்றும் 2015ல் பட்டத்தை வென்றிருந்தது. பாகிஸ்தான் 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்களின் ஹாக்கி இந்தியா நிர்வாக வாரியம் வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் துணை ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.