சினிமா கனவு கைகூடவில்லையெனில் இதை தான் செய்திருப்பேன்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையற தாக்க என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். எனினும், முன்னணி கதாநாயகியாக 'என்னமோ ஏதோ' திரைப்படம் மூலம் அறிமுகமானார். 2014ல் வெளியான இந்த படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் அடுத்ததாக கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெற்றியை பெற்றது. கோலிவுட்டில் அவருக்கு கிடைத்த பெயரால், பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழில், இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் கபூருடன் ஒரு நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிளான் B
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு சினிமா துறையில் வெற்றி கிடைக்கவில்லை எனில் மற்றொரு பிளான் இருந்ததாக தெரிவித்திருந்தார். கணிதப் பட்டதாரியான ரகுல் ப்ரீத் சிங் படித்து கொண்டிருக்கும் போதே நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், நடிப்பு துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் தனக்கு மற்றொரு யோசனை இருந்ததாக தெரிவித்தார். "அதில் பட்டம் பெற்ற பிறகு மேற்படிப்பான எம். பி. ஏ. பேஷனில் இறங்கியிருப்பேன்" என தெரிவித்திருந்தார். "ஆனால், அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த நிலை ஏற்படவில்லை. நான் ஒதுக்கிய இரண்டு வருடத்திலேயே அனைத்தும் கைகூடியது" என்று கூறியுள்ளார்.