Page Loader
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 02, 2023
06:02 pm

செய்தி முன்னோட்டம்

ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் லண்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளன. 2021இல் நடந்த முந்தைய இறுதிப் போட்டியில் இந்திய அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் எப்போது வேண்டுமானாலும் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு மழை பெய்யும் என்பதால் ஆறாவது நாள் (ஜூன் 12) ரிசர்வ் நாளாக வைக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களும் முழுமையாக முடியாமல் போட்டி டிராவில் முடிந்தால் யாருக்கு கோப்பை என்பது உள்ளிட்ட விதிகளை இதில் பார்க்கலாம்.

what happen if match draw

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான விதிகள்

போட்டியில் இடையே மழை பெய்தால் அடுத்தடுத்த நாட்களில் இழந்த நேரத்தை ஈடுசெய்ய நடுவர்கள் முயற்சிப்பார்கள். அவ்வாறு இழந்த நேரத்தை முழுமையாக ஈடுசெய்யவில்லை என்றால், ரிசர்வ் நாளில் ஈடு செய்ய வேண்டிய அளவிற்கான ஓவர்கள் மட்டும் விளையாடப்படும். மழை பெய்யாவிட்டாலும், போட்டி டிராவில் டிராவில் முடிந்தால் ரிசர்வ் நாளில் மீண்டும் விளையாடப்படுமா என்றால், அவ்வாறு நடக்காது. ரிசர்வ் நாள் என்பது வானிலை மாற்றத்தை ஈடுகட்ட மட்டுமே கொண்டு வரப்பட்டு உள்ளது. ஐந்து நாட்களும் முழுமையாக போட்டி நடந்தும் டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். போட்டி சமனில் முடிந்தாலும், கோப்பை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.