தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்
தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஹுமார்க் இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் சீனாவின் லு குவாங் ஜூ அல்லது தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்னை எதிர்கொள்ள உள்ளார். முன்னதாக, இந்த சீசனில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, உலகத் தரவரிசையில் 6வது இடத்திலிருந்து 23வது இடத்திற்கு பின்தங்கிய நிலையில், தற்போது மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே தாய்லாந்து ஓபனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரண் ஜார்ஜ் காலிறுதியில் பிரான்சின் டிஜே போபோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார்.