மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்ட நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல்!
ஹங்கேரியில் நடந்த யூரோபா கால்பந்து லீக் இறுதிப் போட்டியில் செவில்லாவிடம் ரோமா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போட்டியின் நடுவராக செயல்பட்ட அந்தோனி டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் புடாபெஸ்ட் விமான நிலையத்திற்கு சென்றபோது ரசிகர்கள் தாக்கினர். ரோமா அணியின் மேலாளர் ஜோஸ் மவுரின்ஹோ கார் பார்க்கிங்கில் டெய்லரை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்துச் செல்வதும், புடாபெஸ்ட் விமான நிலையத்தில் டெய்லரின் குடும்பத்தினர் மீது நாற்காலிகள் மற்றும் பாட்டில்கள் வீசப்படும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே செவில்லா ரோமாவை பெனால்டியில் தோற்கடித்து ஏழாவது முறையாக யூரோபா லீக் பட்டத்தை வென்றது.
நடுவர் மீது தாக்குதல் நடத்தியதன் காரணம்
இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்ட டெய்லர் மொத்தம் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கினார். இது யூரோபா லீக் ஆட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். மேலும் போட்டியில் மொத்தமாக 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. இதனால் ரோமா அணியின் மேலாளர் ஜோஸ் மவுரின்ஹோ கடுப்படைந்து டெய்லரைப் பார்த்து, "நடுவர் ஸ்பானிஷ் போல் தெரிகிறது" என்று கூறினார். மொரின்ஹோவின் கருத்துக்கள் மற்றும் கார் பார்க்கிங்கில் நடுவர் அந்தோனி டெய்லரை பார்த்து அவமானம் என்று அழைத்தார். இது ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், புடாபெஸ்ட் விமான நிலையத்தில் வைத்து நடுவர் டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரசிகர்கள் நாற்காலிகளை வீசி தாக்கினர்.