Page Loader
கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல்
கார்த்தி 27 படத்தில் இணையப்போகும் அரவிந்த் சுவாமி

கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 02, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை இயக்கவிருப்பது, '96' படப்புகழ் பிரேம்குமார் என்பது அறிந்ததே. 'கார்த்தி 27' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் குறித்து ஒரு புதிய அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்கவிருப்பது அரவிந்த் சுவாமி. நடிகர் அரவிந்த்சுவாமி கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் இணைந்துள்ளார். இது கார்த்தியுடன் அவர் இணையும் நான்காவது படமாகும். தற்போது கார்த்தி 'ஜப்பான்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இதனை அடுத்து, நலன் குமாரசாமி படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பிரேம்குமார் படத்தில் இணைவார் எனக்கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

ட்விட்டர் அஞ்சல்

கார்த்தி 27 அப்டேட்!