
தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் திருநெல்வேலி வழியே தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைத்தார்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த இந்த வாராந்திர அதிவிரைவு ரயிலானது தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்று கிழமை புறப்படும்.
செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை புறப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ரயில் சேவையானது ஜூன் 1ம் தேதி(நேற்று) முதல் வாரத்தில் 3 முறை இயக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும், செங்கோட்டையிலிருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும்.
ரயில் சேவை
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில்
இந்த புதிய சேவையானது நேற்று முதல் செயல்பட துவங்கி விட்டது.
தமிழகத்தின் டெல்டா மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் சேவை அதிகளவில் பயன்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலிருந்து முதன்முறையாக திருவாரூர்-காரைக்குடி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில் இது என்பது கூடுதல் சிறப்பு.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, அறந்தாங்கி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியே செங்கோட்டைக்கு மறுநாள் காலை 10.50 மணிக்கு சென்றடைகிறது.
செங்கோட்டையிலுருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.10க்கு தாம்பரம் வந்தடைகிறது.