Page Loader
இந்திய அணிக்கு மூன்று விதமான ஜெர்சிக்களை அறிமுகம் செய்தது பிசிசிஐ!
இந்திய அணிக்கு மூன்று விதமான ஜெர்சிக்களை அறிமுகம் செய்தது பிசிசிஐ

இந்திய அணிக்கு மூன்று விதமான ஜெர்சிக்களை அறிமுகம் செய்தது பிசிசிஐ!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 02, 2023
12:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வியாழன் (ஜூன் 1) அன்று வெளியிடப்பட்டது. விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ், இந்திய அணியின் பிரதான கிட் ஸ்பான்சராக பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்த நிலையில், வியாழக்கிழமை முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி அடிடாஸ் லோகோவுடன் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி இனி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மூன்று வெவ்வேறு விதமான வண்ணங்கள் கொண்ட ஜெர்சிகளை அணிந்து விளையாடும். பிசிசிஐ மற்றும் அடிடாஸ் இடையேயான ஒப்பந்தம் மார்ச் 2028 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

indian women team also gets new jersey

மகளிர் அணிக்கும் புதிய ஜெர்சி

பிசிசிஐ இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாது மகளிர் மற்றும் இளைஞர் அணிகள் உட்பட அனைத்து போட்டிகள், பயிற்சி மற்றும் பயண உடைகள் ஆகியவற்றிற்கான இந்தியாவின் ஒரே ஸ்பான்சராக இனி அடிடாஸ் இருக்கும். இதற்கிடையே ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. போட்டி ஜூன் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவிய நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.