
ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 1
செய்தி முன்னோட்டம்
'வாரிசு', 'துணிவு', 'பொன்னியின் செல்வன்' மற்றும் பல வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் கொடுத்து வருகிறது.
மேலும் இந்த மாதம் 5 படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.
அதன் முதல் பட்டியலை காணலாம்.
வீரன்: ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி மற்றும் அதிரா ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'வீரன்'. இப்படம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. தான் நடித்த இந்த படத்திற்கு தானே இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழன் ஆதி. படத்தின் வில்லனாக வினய் ராய்யும் முக்கிய வேடங்களில் முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
Movie Release
திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படம்
காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்: முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரபு மற்றும் பாக்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யாவும் சித்தி இத்னானியும் கிராமப்புற வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. ஆர்யா தனது கிராமத்தில் விதிகளை உருவாக்கும் கேங்க்ஸ்டருக்கு எதிராக செல்லும் ஹீரோவாக நடிக்கிறார்.
போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில், ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.