
அஸ்வினின் கேரம் பந்துவீச்சை காப்பியடிக்க முயற்சி செய்யும் ஆஸி. வீரர் டோட் மர்பி
செய்தி முன்னோட்டம்
2023 பிப்ரவரில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய இளம் சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி முதல் சுற்றுப்பயணத்தின் போது அஸ்வின் ரவிச்சந்திரன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து அவரது பந்துவீச்சை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினின் கேரம் பந்தை தனது பந்துவீச்சில் சேர்க்கும் முயற்சியில் டோட் மர்பி ஈடுபட்டுள்ளார்.
22 வயதான அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த நான்கு டெஸ்ட் தொடரின் போது முதல் முறையாக டெஸ்டில் அறிமுகமானதோடு, 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், ஆஷஸ் தொடரிலும் தொடரிலும் அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.
tod murphy interview know details
டோட் மர்பி பேட்டியின் முழு விபரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் இன்னும் கேரம் பந்தை பயன்படுத்துவது குறித்து முயற்சி செய்து வருகிறேன்.
ஆனால் அஸ்வின் அதை செய்வதைப் போல் நானும் செய்ய இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிப்படையான விஷயங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதையும், நம்மால் முடிந்தவரை நல்ல நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்." என்று டோட் மர்பி கூறினார்.
அஸ்வினின் பந்துவீச்சு குறித்து பேசிய மொர்பி, "அவரது ஒவ்வொரு பந்தும் எவ்வாறு வெளியேறுகிறது என்பதையும், அவரது கை மற்றும் மணிக்கட்டு நிலையை நெருக்கமாகப் பார்க்கவும் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.